Official Circular
தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா 2025 - 2026
குருவடி சரணம்!ஓம் சக்திஒரே தாய்!திருவடி சரணம்!ஒரே குலம்!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம்
மேல்மருவத்தூர் 603 319.
தமிழ்நாடு, இந்தியா.
நிறுவனத்தலைவர்: ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார்
தலைவர்: V. திருமதி லட்சுமி
044-27529096| masm992007@gmail.com
தேதி : 27.11.2025
தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா 2025 - 2026
சுற்றறிக்கை
மாவட்ட தலைவர்கள், துணைத் தலைவர்கள் கவனத்திற்கு,
இருமுடி விழா (15.12.2025 முதல் 31.01.2026 வரை) மற்றும் தைப்பூச விழா (01.02.2026) அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. ஆகையால் இயக்கத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருமுடி செலுத்தும் விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட தலைவர்கள், துணைத் தலைவர்கள், மன்ற தலைவர்கள், இருமுடி செலுத்த வரும் சக்திகளை அழைத்துவரும் குழு பொறுப்பாளர்கள் அவசியம் சக்திமாலை அணிந்து வரும் பக்தர்களிடம் கூறி முழுமையாக கடைபிடிக்க செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

துணைத்தலைவர் - ACMEC TRUST
துணைத்தலைவர் - MASM
